[X] Close

மார்ச் 10 இல் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்

March-10-Released-Movie

மார்ச் 10 ஆம் தேதி மூன்று படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

புருஸ்லீ

ஜீவி பிரகாஷ், கிரித்தி கர்பண்டா, முனீஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ள படம், ’புரூஸ்லீ’. பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இந்தப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் பொங்கலுக்கு தள்ளிப் போனது. அப்போது பெரிய படங்கள் ரிலீஸ் ஆனதால் ரிலீஸ் தேதி தள்ளி வகைப்பட்டது. இப்போது வரும் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடப் படங்களில் நாயகியாக நடித்து வந்த கீர்த்தி கர்பண்டா, புரூஸ்லீ படம் மூலம் முதன்முறையாக தமிழில் காலடி பதிக்கிறார்.


Advertisement

மாநகரம்

மார்ச் 10 ஆம் தேதி ரேசில் அடுத்து களமிறங்கும் திரைப்படம் ’மாநகரம்’. புதுமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரியாஸ் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு படத்தைத் தயாரித்துள்ளார்.

நிசப்தம்


Advertisement

அறிமுக இயக்குநர் மைக்கேல் அருண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிசப்தம். ’நாடோடிகள்’அபிநயா, அஜய் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படமும் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. ஷான் ஜேஸீஸ் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகயுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close