Published : 06,Jan 2018 07:49 AM
பெற்றோரை வெளியேற்றிய மகள்: 2 நாட்களாக பேருந்து நிலையத்தில் தஞ்சம்

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த தம்பதியினரை மீட்டு காவல்துறையினர் முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்தவர்கள் சூர்யகாந்த்(90) கமலாம்மா (80) தம்பதியினர். இவரது மகள் இவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதால் அங்குள்ள பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை மீட்டு அங்குள்ள முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் போதிய அடையாள அட்டை இல்லாததால் இந்த தம்பதியினர் அங்கு தங்க அனுமதிக்கப்படவில்லை.இதனால் வேறு வழியின்றி அந்த தம்பதியினர் மீண்டும் பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
பேருந்து நிலையத்தில் முதியவர்கள் இருப்பதை கண்ட காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்துள்ளனர். மகள் வீட்டை விட்டு வெளியேற்றியதும் முதியோர் இல்லம் சென்ற கதையையும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வயதான தம்பதியினரை முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளனர்.