[X] Close

இரவைப் பகலாக்கிய புத்தாண்டு கொண்டாட்டம்

new-year-2018-celebration-all-over-the-world

அமெரிக்காவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டிவருகின்றன. இரவை பகலாக்கும் வகையில் வாண வேடிக்கையும், உற்சாக கொண்டாட்டங்களுமாய் புத்தொளியுடன் சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் ஜொலித்தன.

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பிரேசில் நாட்டில் உள்ள கேபாகபானா கடற்கரையில் வாணவேடிக்கையுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. பிரேசில் மக்கள் பாரம்பரிய சாம்பா நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். இதேபோல் லண்டன்‌ மக்கள் தேம்ஸ் நதிக் கரையில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடினர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close