Published : 29,Dec 2017 08:45 AM
தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ள மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த மசோதாவில் 5 அம்சங்களை தமிழக அரசு எதிர்த்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள மோட்டர் வாகன திறுத்த மசோதாவில் 5 அம்சங்களை தமிழக அரசு எதிர்த்துள்ளதாக தெரிவித்தார். 92 ஷரத்துகளுடன் கூடிய மோட்டர் வாகன திருத்த மசோதாவில், 5 ஷரத்துகளில் திருத்தங்கள் வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
வரி வசூல் உள்ளிட்ட இதர விவகரங்கள் தனியார் வசம் செல்ல புதிய சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது இதனை தமிழக் அரசு எதிர்த்துள்ளது என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போக்குவரத்து துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். எனவே, அனைத்து வசதிகளும் தமிழக அரசிடம் உள்ளதால் அதனை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.