Published : 07,Dec 2017 03:16 PM

முதலிடத்தை வேகமாக நெருங்கும் விராட் கோலி

Virat-Kohli-jumps-to-second-spot-in-latest-ICC-Test-rankings

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கேப்டன் விராட் கோலி பல இடங்கள் முன்னேறியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட மூன்று சதங்களை கோலி விளாசினார். 3 போட்டிகளில் மொத்தம் 610 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார். 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்ததன் மூலம் கோலி டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர், புஜாரா, வில்லியம்சன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கோலி 893 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து ஜோ ரூட் 879 புள்ளிகளும், புஜாரா 873 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். லோகேஷ் ராகுல் 12-வது இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் போட்டியிலும் முதலிடத்தை பிடித்தால் மூன்று வகையான போட்டிகளிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்தவர் என்ற மைக்கல்லை அவர் எட்டுவார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்