கேரளாவில் இதுவரை சடலமாக மீட்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகப் பகுதியில் நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தூத்துகுடியைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் ஜூடு என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை திருவனந்தபுரம் பூந்துறை பகுதி மீனவர்கள் என அடையாளம் பெறப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
சடலமாக மீட்கப்பட்ட மற்ற மீனவர்களை அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்