Published : 03,Dec 2017 04:25 AM

விஷால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: ராஜேந்திர பாலாஜி

Minister-Rajendra-Balaji-said-about-RK-Nagar-ByElection-Vishal-contest

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ‌விஷால் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்கச் செயலாளராகவும் உள்ள விஷால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் கடந்த இரு நாள்களாக ஆலோசனை நடத்தி வந்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் ஆர்.கே. நகர்த் தொகுதியில் பல முனைப் போட்டி உறுதியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையில் தொலைபேசியில் கருத்து தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஷால் ஆர்.கே இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என தெரிவித்தார். அத்துடன் தேர்தலுக்கு பின் விஷாலின் திரையுலக வாழ்க்கையும் அஸ்தமனமாகும் என்று அவர் கூறினார். இதுதொடர்பாக பேசிய இயக்குநர் அமீர், ஆர்.கே.நகர் விஷால் தேர்தலில் போட்டியிடுவது பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்