Published : 03,Dec 2017 03:43 AM

திருமணமான முதல் நாளில் பெண்ணுக்கு கணவன் செய்த கொடுமை

husband-tortured-his-wife

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதுமணப் பெண்ணை பிளேடால் அறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதார நல்லூரை சேர்ந்த மருத்துவர் சைலஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் ராஜேஷ்க்கும் நேற்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் முதலிரவுக்காக ராஜேஷ் உள்ள அறைக்கு சென்ற சைலஜா, சில மணி நேரத்தில் அறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது, சைலஜா உடலின் பல்வேறு பகுதிகளை ராஜேஷ் பிளேடால்
வெட்டியிருக்கிறார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சைலஜா அறையின் கதவை திறந்து வெளியே வந்து மயங்கி விழுந்தார். தற்போது சைலஜாவுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரூ.60 லட்சம் செலவு செய்து திருமணம் செய்த நிலையில் தனது மகளின் வாழ்கையை சீரழித்த ராஜேஷ் மீது கடும் நடுவடிக்கை
எடுக்க வேண்டும் என சைலஜாவின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்