[X] Close

விமான நிலைய விரிவாக்க நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

Airport-extension-work--CM-Palanisamy-inspection

தமிழகத்தில் விமான நிலையங்களின் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் தூத்துகுடி விமானநிலையங்களின் விரிவாக்கத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிலம், அதை கையகப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த விமானநிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டால் அகலமான விமானங்கள் வந்து இறங்கும் வசதி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்பும், தொழில் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், ஓசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரம் விமான நிலையங்களிலிருந்து விமானப் போக்குவரத்தை விரைவில் தொடங்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும், வேலூர் விமான நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close