[X] Close

ஜெ. மரணம் விசாரணை ஆணையத்திற்கு எதிராக மேல்முறையீடு

Jayalalitha-Death-enquiry-commission

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று விசாரணையை தொடங்கவுள்ள நிலையில் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனக்கூறி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். அவ்வாறு அமைத்தால் தான் மீண்டும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியுடனான இணைப்பு சாத்தியம் என்று கூறியிருந்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து, முதலமைச்சர் உத்தரவிட்டார். அந்த ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், சட்டப்பேரவையில் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யக்கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா மரணம்‌ குறித்து ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் புதிய குழு அமைக்க வேண்டும் எனவும் ஜோசப்பின் மனுவில் கோரப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close