Published : 20,Oct 2017 01:59 PM
பெங்களூரு விபத்தில் மீட்கப்பட்ட சிறுமி உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழப்பு

பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் மீட்கப்பட்ட குழந்தை உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது.
பெங்களூருவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் படுகாயமடைந்த சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து. இதன் மூலம் உயிரிழப்பு எட்டாக அதிகரித்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதால் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.