[X] Close

காவல்துறை அதிகாரி தற்கொலை செய்யப்போவதாக முகநூலில் பதிவு

Covai-police-suicide-attempt

கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர் தற்கொலை செய்யப்போவதாக அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement

கோவைபுதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4வது பட்டாலியனில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரை வேலூருக்கு பணியிட மாற்றம் செய்ததால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்கொலை செய்யப்போவதாக முகநூலில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ முகநூலில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சாணப் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்ய முயன்ற ஸ்ரீகாந்த் மீட்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close