[X] Close

டெங்குவை தடுக்க அரசின் நடவடிக்கைகள் போதாது: பொன்.ராதாகிருஷ்ணன்

Pon-Radhakrishnan-about-dengue-and-government

டெங்கு காய்ச்சலை‌த் தடுக்க தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் போதிலும், அந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசாங்கம் எல்லாத் தகுதிகளையும் பெற்ற அரசாங்கம். இதற்கு முன்னாடியும் தமிழகத்தில் டெங்கு வந்திருக்கிறது, ஆனால் அப்போது இருந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுத்திருக்கிறது. தற்போது உள்ள அரசும் சில முயற்சிகளும், விழிப்புணர்வு முகாம்களும் நடத்தி வருகின்றது. அதற்காக நாம் அரசை பாராட்ட வேண்டும். இருப்பினும் அரசின் இந்த நடவடிக்கை போதாது என்பது எனது மனமார்ந்த கருத்து” என்று கூறினார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close