[X] Close

சங்கரநாராயணர் கோயில் வெள்ளிப் பல்லக்கு திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

4-arrested-in-robbery-case

நெல்லை சங்கரநாராயணர் கோயிலில் திருடப்பட்ட வெள்ளிப் பல்லக்கை உருக்கி விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை சங்கரநாராயணர் கோயிலில் இருந்த வெள்ளிப் பல்லக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருடுபோனது. இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் 23 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பல்லக்கை சிறிது சிறிதாக உருக்கி கொள்ளையர்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயிலின் ஒப்பந்த ஊழியர்கள் பட்டத்துராஜா, திலகராஜா, காளிதாஸ் ஆகியோரும் நாகராஜ் என்ற நகை பட்டறை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close