Published : 24,Jan 2023 08:57 AM
வேலூர்: குடும்ப பிரச்னையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

குடியாத்தம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அழிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். கட்டிட தொழிலாளியான இவருக்கு புனிதா என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். புனிதா, ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.. இதையடுத்து நேற்று மாலை புனிதா பணி முடித்து விட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அழிஞ்சிகுப்பம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஜெயசங்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த புனிதாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த மேல்பட்டி காவல் துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்னையில் மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..