Published : 09,Nov 2022 01:20 PM

பாக் VS நியூசி அரையிறுதி 1-வது ஆட்டம்: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு!

New-Zealand-won-the-toss-and-elected-to-bat-in-Pak-VS-New-Zealand-semi-final-1

2022 டி20 உலகக்கோப்பை தொடரின் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

2022 டி20 உலகக்கோப்பை போட்டிகள் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன. பொதுவாகவே உலகக்கோப்பையின் உள்ளே வரும் சிறிய அணிகளுடனான போட்டியை எக்ஸ்ட்ரா புள்ளிகளை சேர்க்கும் ஒரு போட்டியாகவே பெரிய அணிகள் பார்த்து வந்த நிலையில், எந்த உலகக்கோப்பையிலும் இல்லாத அளவிற்கு இந்த உலகக்கோப்பையில் சிறிய அணிகள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பெரிய அணிகளுக்கு எதிராக பெரிய அப்செட்டுகளை நிகழ்த்தி காட்டியுள்ளன. அந்த வகையில் விறுவிறுப்பான போட்டிகளை கடந்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த 2022 டி20 உலகக்கோப்பை.

image

2022 டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது டாஸ் வென்றிருக்கும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

image

இதுவரை இரு அணிகளுக்கிடையேயான மோதலில் 28 போட்டிகளில் 17 போட்டிகளை பாகிஸ்தான் அணியும், 11 போட்டிகளை நியூசிலாந்து அணியும் வென்றுள்ளன. விறுவிறுப்பான இந்த போட்டி பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி மைதானத்தில் நடக்கவிருப்பதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்