Published : 25,Oct 2022 12:02 PM

4 நாட்களில் கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் வசூல் எவ்வளவு?

DAY-4-SARDAAR-AND-PRINCE-BOX-OFFICE-COLLECTION

கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. அதேநேரத்தில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்தப் படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். மேலும் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை எஸ். லக்ஷமன் குமார் தயாரித்திருந்தார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதி செய்திருந்தார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் கார்த்திக்கு 3-வது தொடர் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 47 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

image

மேலும் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலை ஈட்டியுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம், 4 நாட்களில் 32 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்றுடன் விடுமுறை தினம் முடிவதால், தீபாவளிப் படங்களுக்கான வசூல் அதே அளவில் இருக்குமா? இல்லை பாதிக்குமா? என்று இனி வரும் நாட்களில் தெரியவரும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்