Published : 07,Sep 2022 09:11 AM
`பாரத ஒற்றுமை பாதயாத்திரை’: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்த ராகுல் காந்தி!

பாரத ஒற்றுமை பாதயாத்திரைக்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சென்னை வந்தடைந்திருக்கிறார். விமான நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கவும், காங்கிரஸ் தொண்டர்களிடையே கட்சியை பலப்படுத்தவும் பாரத ஒற்றுமை என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று காலை பாத யாத்திரையை தொடங்குகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு ஆதரவு திரட்டவுள்ளார். இதற்காக சென்னை வந்தடைந்த ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றடைகிறார். ராகுல்காந்தியின் பாதயாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் மரக்கன்றொன்றும் நட்டு வைத்துள்ளார்.
LIVE: Shri Rajiv Gandhi Memorial | Sriperumbudur | Tamil Nadu https://t.co/HSzsAXJQHL
— Rahul Gandhi (@RahulGandhi) September 7, 2022