[X] Close

டிடிவி தினகரன் ஒரு திருடன்: அமைச்சர் ஜெயக்குமார்

Minister-Jayakumar-about-Dinakaran

டிடிவி தினகரன் ஒரு திருடன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் தினகரன் தரப்பிற்கும், முதலமைச்சர் பழனிசாமி தரப்பிற்கும் மோதல் வலுப்பெற்றுள்ளது. தற்போது உள்ள அரசை ஒரு வாரத்திற்குள் வீட்டிற்கு அனுப்புவோம் என்று தினகரன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார் என்று கூறினார். இதையடுத்து பேசிய தினகரன், நான் மாமியார் வீட்டையெல்லாம் பார்த்துவிட்டு வந்தவன்தான், அரசு வீட்டிற்கு செல்வது உறுதி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஒரு பழமொழியைக் குறிப்பிட்டு தினகரனை விமர்சித்தார். அத்துடன் தினகரன் ஒரு திருடன் என்றும், அவர் வித்தையை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close