Published : 26,Jul 2022 02:17 PM

ரூ.480தான் முதலீடு.. சுயிங்கம் மென்று மாதாமாதம் ரூ.67,000 சம்பாதிக்கும் ஜெர்மனி பெண்!

german-women-earns-67000-by-chewing-gum-and-blowing-bubble

சமூக வலைதளங்களில் வித்தியாசமான பதிவுகளை பகிர்வதன் மூலம் தற்போது பலரும் வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் சுயிங்கம் மென்று bubble விடுவதை வைத்தே மாதத்திற்கு 67 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாராம்.

ஜூலியா ஃபாரட் என்ற 30 வயது பெண், தனது வாயில் 30 சுயிங்கம்மை போட்டு மென்று அதன் மூலம் தனது தலையை விட மிகப்பெரிய Bubble விடும் வீடியோக்களையும், ஃபோட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதற்காக அவர் ஒரு மாதத்திற்கு வெறும் 5 பவுண்ட் மட்டுமே செலவிடுகிறாராம். அதாவது 480 ரூபாய்.

image

இது தொடர்பாக பேசியுள்ள ஜூலியா ஃபாரட், “நீ சுயிங்கம் மென்று bubble விடுவதை போட்டோ, வீடியோவாக எடுத்து அதை வெளியிட்டு பணம் சம்பாதிக்கலாம் என என்னுடைய நண்பர் என்னிடம் விளையாட்டாக கூறினார். அதையடுத்து வேடிக்கையாகத்தான் செய்தேன். ஆனால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒரு வரலாறுபோல் இருக்கிறது.

பின்னர் என்னுடைய இந்த செயலுக்கு இண்டெர்நெட்டில் நல்ல வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வந்ததை அடுத்து நானும் தொடர்ந்து சுயிங்கம் மென்று பபுள் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இதனால் நான் நல்ல பொழுதுபோக்கை கொடுப்பதாக எண்ணி என்னுடைய followers மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

image

இதுபோக நான் பபுள் விடுவதை கஸ்டமைஸ் செய்து வீடியோ, போட்டோவாக வெளியிடும்படியும் கேட்கிறார்கள்.” என அவர் மிரர் செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

பொதுவாக பெரிய பபுள் விட 10-15 பபுள்கம்களையும், மிகப்பெரிய பபுள் விட ஒரே நேரத்தில் 30 சுயிங்கம்மை மெல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஜூலியா.

சுயிங்கம் மென்று பபுள் விடுவதை பொழுதுபோக்காக தொடங்கி அதனை பார்ட் டைம் வேலையாக செய்து வரும் ஜூலியா, உண்மையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். அவர் சிவில் இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்சரில் பட்டமும் பெற்றிருக்கிறாராம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்