Published : 13,Sep 2017 03:02 AM
சுனந்தா புஷ்கர் மரணம்: சீல் வைக்கப்பட்ட அறையை திறக்க உத்தரவு

சுனந்தா புஷ்கர் மரணத்தால் சீல் வைக்கப்பட்ட ஓட்டல் அறையை உடனே திறக்க வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், 2014-ம் ஆண்டு தெற்குடெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த அறையை போலீசார் பூட்டி சீல் வைத்தனர். ஓட்டல் அறைக்கு சீல் வைத்து இருப்பதால், தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே அந்த ஓட்டல் அறையை உடனே திறக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி ஓட்டல் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் சீலை அகற்றி அறையை திறக்க வேண்டும் என்று போலீசுக்கு ஜூலை மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது உடனடியாக ஓட்டல் அறையை திறக்க வேண்டுமென டெல்லி போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.