எத்தியோப்பியாவிலிருந்து ரூ.28 கோடி மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருளை வயிற்றில் வைத்து டெல்லிக்கு கடத்திவந்த 2 பெண்களை டெல்லி போலீசார் கைதுசெய்துள்ளனர்.
அயன் படத்தில் சூர்யாவின் நண்பர் சிட்டிபாபு(ஜெகன்) வில்லனின் பேச்சை நம்பி கொக்கெய்ன் என்ற போதைப்பொருளை மாத்திரை வடிவில் விழுங்கி வயிற்றில் பதுக்கி இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு விமானத்தில் கடத்திச்செல்வார். அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன? என்பது படம் பார்த்த எல்லோருக்கும் தெரியும். அதேபோன்றதொரு கடத்தல் சம்பவம் தற்போது டெல்லியில் நடந்துள்ளது.
எத்தியோப்பியா தலைநகரான ஆடிஸ் ஆபபாவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு உகாண்டா நாட்டுப் பெண்கள் வந்து இறங்கியுள்ளனர். சந்தேகத்தின்பேரில் சுங்கவரித்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். விசாரித்ததில் அவர்கள் இருவருக்கும் எந்த தொடர்புமில்லை என்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அசௌகர்யமாக இருப்பதை பார்த்த அதிகாரிகள் அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஒரு பெண் தனது வயிற்றில் கொகெய்ன் போதைபொருளை மாத்திரைவடிவில் விழுங்கி கடத்திவந்திருப்பதாக ஒத்துக்கொண்டார். இதனையடுத்து அந்தப் பெண்ணை RML மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வயிற்றிலிருந்து 81 கொக்கெய்ன் மாத்திரைகளை வெளியே எடுத்துள்ளனர். 892 கிராம் எடையுள்ள அந்த கொக்கெய்னின் மதிப்பு ரூ. 13.6 கோடி என தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் பரிசோதித்து பார்த்ததில் அவர் வயிற்றிலும் போதைபொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து 957கிராம் எடையுள்ள 80 மாத்திரைகளை அவர் வயிற்றிலிருந்து எடுத்தனர். இதன் சந்தைமதிப்பு ரூ.14.35கோடிகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கடத்தி வரப்பட்ட மொத்த கொக்கெய்னின் அளவு 1.8 கிலோ எனவும், இதன் மதிப்பு ரூ.27.95 கோடிகள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide