பாகுபலி படத்திற்காக போடப்பட்ட பிரமாண்டமான அரண்மனை செட்டிங் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரு பாகங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றன. பலநூறு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுப் படத்திற்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்குள் மிகப் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த அரண்மனையை உருவாக்க ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கலைஞர்கள் இரவு பகலாக உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பில் தயாரான அந்த அரண்மனை செட்டுக்கு மட்டும் பலகோடி செலவானது.
படப்பிடிப்பு முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்தப் பின்பும் அந்த செட்டை அகற்றாமல் அப்படியே பாதுகாத்து வந்தனர். இந்நிலையில்,’மஹிஸ்மதி’எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த அரண்மனை இப்போது பொதுமக்கள் கண்டுகளிக்கும் சுற்றுலாத் தலமாக மாற்றப்படுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமாக சென்று அந்த அரண்மனையை கண்டு ரசித்து வருகின்றனர். தேவைப்பட்டால் இங்கு படப்பிடிப்பையும் நடத்திக் கொள்ளலாம் என்று தயாரிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!