மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் உயர்க்கல்வி பயில முடியும் என மதுரையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசியுள்ளார்.
மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் வட மாநில இளைஞர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது வருந்தத்தக்க ஒன்று. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு தரப்பில் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் நுழைவு தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில முடியும். தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கப்பட வேண்டும்.
நான் அரசியல் கட்சி ஏதும் தொடங்கவில்லை. 7 ஆண்டுகாலம் எந்தவொரு அதிகாரமும் இல்லாத பணியில் இருந்தேன். அதன் அடிப்படையிலேயே நான் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விலகினேன். ஐ.ஏ.எஸ் பணியில் இருந்து விலகிய போது முன்னணி கட்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் கொள்கை பிடித்த இளைஞர்கள் தேர்தலில் நின்றார்கள். அவர்களுக்காக பிரச்சாரம் செய்தேன். ஊழல் செய்ய வேண்டும், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற நிலை தான் தற்போது உள்ளது. தமிழ் மண்ணுக்காக, ஈழத் தமிழர்களுக்காக, சாதிக்கு எதிராக என அனைவருக்குமாக தமிழக அரசு செயல்படும் என நம்புகிறேன்.
இப்போதைய இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இளைஞர்கள் இன்னும் விழிப்புணர்வு அடைய வேண்டும். இயற்கை வளங்களை சூரையாடுவது, ஊழல் ஆகியவைகளில் இளைஞர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். போலவே மாணவர்கள் ஒழுக்கதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் ஒழுக்கம் தவறி செல்வதில் சமூகத்திற்கும் பங்குண்டு. மாணவர்கள், இளைஞர்கள் போதை வழிக்கு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும், பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசி தீர்வு காண வேண்டும்" என கூறினார்.
சமீபத்திய செய்தி: பள்ளிப்பேருந்தின் ஜன்னல் வழியே தலையை நீட்டிய சிறுவன் பலி - உ.பியில் வெடித்த போராட்டம்
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்