Published : 12,Apr 2022 02:00 PM

தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் தீபக் சாஹர்?- சிக்கலில் சிஎஸ்கே?

Severe-setback-for-CSK-that-Deepak-Sahar-not-come-across-this-IPL-series

சென்னை அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் முதுகில் ஏற்பட்ட புதிய காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடக்கும் விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோசமாகி வருகின்றன. ஐபிஎல் 2022ல் விளையாடிய 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ளது. தற்போது IPL 2022 புள்ளிகள் அட்டவணையில் 10வது இடத்தில் உள்ளது. இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான போட்டியில், மற்றொரு மோசமான செய்தி சிஎஸ்கேவின் கதவுகளைத் தாக்கியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மற்றொரு காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல்லில் இருந்து முற்றிலும் அவர் விலகுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chennai Super Kings Highest Paid Deepak Chahar | சென்னையில் தீபக் சாஹர்! | Sports News in Tamil

ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒயிட்-பால் தொடரின்போது ஏற்பட்ட குவாட்ரைசெப்ஸ் காயத்தால் தீபக் சாஹர் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரால் இந்த சீசனின் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட முடியவில்லை. அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது தெளிவாக கூறப்படாமல் இருந்தது.

தற்போது அவரது முதுகில் ஏற்பட்டுள்ள புதுக் காயம் அவர் ஐபிஎல்லில் பங்கேற்பதையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் கீழ் ஏற்கெனவே தள்ளாடி வரும் நிலையில் தீபக் சஹார் இல்லாமல் போனால் அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். சென்னை அணி தரப்பில் இந்த தகவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்