Published : 02,Sep 2017 05:47 AM

அத்துமீறிய போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

Conversion-to-the-Armed-Police-Armed-Forces

நீலகிரியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாணவர்கள் மற்றும் மக்களை லத்தியால் தாக்கிய போலீஸ் அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றாப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.மனோகரன், திடீரென மாணவர்கள் மற்றும் பொது மக்களை லத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த 10ம் வகுப்பு மாணவர் ஜில்சன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனால் அதிருப்தி மற்றும் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர்கள், சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குன்னூர்- உதகை சாலையில், போலீஸ் அதிகாரியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து எஸ்.ஐ. மனோகரன் உடனடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்ட பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்