[X] Close

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா‌ 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

US-Open-tennis--Sharapova-progress-to-the-3rd-round

அமெரிக்க ஓபன் டென்னிஸில் ரஷ்யாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சிறப்பு அனுமதியின் மூலம் இந்தத் தொடரில் விளையாடி வரும் நட்சத்திர வீராங்கனை ஷரபோவா, இரண்டாவது சுற்றில் ஹங்கேரி வீராங்கனை டிமியா பாபோஸை எதிர்த்து விளையாடினார். மூன்று செட்கள் நீடித்த போட்டியில் 6-7, 6-4, 6-1 என்ற கணக்கில் ஷரபோவா வெற்றி பெற்றார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ, சுவிட்சர்லாந்து வீரர் ஹென்றி லாக்சோனனை நேர்செட்களில் வீழ்த்தினார்.

மேலும், பல முன்னணி வீரர்-வீராங்கனைகளின் தோல்வி தொடர்கிறது. தரநிலையில் எட்டாம் நிலையில் உள்ள பிரான்ஸ் வீரர் சோங்காவை இரண்டாவது சுற்றில், கனடா வீரர் ஷபோவாலோவ் 6-4, 6-4, 7-6 என்ற நேர்செட்களில் தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் குரேயேஷிய வீரர் போர்னா கோரிச்‌, நான்காம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ்-வை 3-6, 7-5, 7-6, 7-6 ‌என்ற நான்கு செட்களில் தோற்கடித்தார். மகளிர் பிரிவில் ஐந்தாம் நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கியை, ரஷ்ய வீராங்கனை மகரோவா மூன்று செட்களில் வீழ்த்தினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close