Published : 08,Feb 2022 03:21 PM

இந்தியாவில் விரைவில் வெளியாகும் ஜியோ நிறுவனத்தின் லேப்டாப் என தகவல்!

Reliance-Jio-s-laptop-JioBook-to-launch-very-soon-in-Indian-says-reports-with-ARM-based-Windows-10

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் மலிவு விலையிலான டிஜிட்டல் சாதனங்களை (டிவைஸ்) விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் மடிக்கணினி ஒன்றை இந்திய சந்தையில் வெளியிட உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. ஜியோபுக் என்ற பெயரில் அறியப்படும் அந்த மடிக்கணினி விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

image

அண்மைய தகவலின் படி ARM அடிப்படையில் இயங்கும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஜியோபுக் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் ஜியோபுக்கின் ஹார்டுவேர் விவரங்கள் குறித்த ஆவணத்தில் ARM விண்டோஸ் மடிக்கணினிகளை உருவாக்கி வரும் சீன நிறுவனமான Emdoor டிஜிட்டல் டெக்னாலஜி கம்பெனி லிமிடெட் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதை ஜியோ நிறுவனம் ஜியோபுக் என அதனை ரீபேட்ஜ் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஜியோ டேப்லெட் மற்றும் ஜியோ டிவி மாதிரியான சாதனங்களை அறிமுகம் செய்யும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அது குறித்த விவரங்கள் ஏதும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்