[X] Close

செப்.12 ஆம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு

On-September-12--the-AIADMK-General-Meets

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு பொதுக்குழு கூட்டம் முதல்முறையாக கூட்டப்படுகிறது. அதிமுக செயற்குழுவில் 250 உறுப்பினர்களும், பொதுக்குழுவில் 2 ஆயிரத்து 780 உறுப்பினர்களும் உள்ளனர்.

பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்படுவாரா? துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரன், கட்சிப்பொறுப்புகளில் இருந்து நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என்று அறிவிப்புகளை வெளியிட்டுவரும் வேளையில் அது தொடர்பான நடவடிக்கைகள் என்ன? முதலமைச்சருக்கான ஆதரவை திரும்பப் பெற்ற 19 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை என பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close