[X] Close

பிசிசிஐ ஏலத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

BCCI-auction-case

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தை இணையதளம் மூல‌மாக நடத்த வேண்டும் என தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Advertisement

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஏலத்தில் வெளிப்படைத்தன்மை இருக்காது. பிசிசிஐ நிர்வாகிகளின் சொந்த விருப்பத்திற்கிணங்க தேர்வு இருக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி‌ தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திராசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீல் இடப்பட்ட கவரில் ஒளிபரப்பு உரிமம் கோரும் ஏல‌ முறையே உகந்தது என தெரிவித்தனர். இதனால், நடைமுறையில் உள்ள ஏல முறையை பின்பிற்றிக் கொள்ள பிசிசிஐ-க்கு அனுமதி கிடைத்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close