[X] Close

வணிக சிலிண்டர் விலை ரூ.103.50 குறைந்தது

தமிழ்நாடு

In-Chennai-the-price-of-a-cylinder-for-commercial-use-has-gone-up-by-Rs-103-50-to-Rs--Sold-for-2131

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 103.50 ரூபாய் உயர்ந்து ரூ. 2131 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பது போல் சிலிண்டர் விலையின் நிலவரத்தையும் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.915.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 103.50 ரூபாய் குறைந்து 2,131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதையும் படிக்க: நீலகிரி: பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15.43 விலை நிர்ணயம்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close