[X] Close

”2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிக மழை பதிவு”- ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் தகவல்

தமிழ்நாடு

Chennai-receives-heavy-rainfall-after-2015

2015ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் இந்த வருடத்தில்தான் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 4 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி என பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெய்த மழையில், எம்.ஆர்.சி நகரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 2 மணிநேரத்தில் 10செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை பதிவாகியிருக்கிறது. மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

How Pradeep John went from an obscure blogger to Tamil Nadu's trusted  weatherman


Advertisement

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்ட தகவலின்படி, “சென்னையில் 2015-ம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார். 1996, 2005ம் ஆண்டுகளுக்கு பிறகு அதிகபடியான மழை நாட்களைக்கொண்ட ஆண்டாக இந்தாண்டு இருந்ததாக பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close