Published : 26,Dec 2021 09:59 AM
சத்தியமங்கலம்: எலிப் பொறியில் சிக்கிய அரிய வகை புனுகு பூனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே எலி பிடிப்பதற்காக வைக்கப்பட்ட பொறியில் அரிய வகையைச் சேர்ந்த புனுகு பூனை பிடிபட்டது.
ஒப்பலவாடானூர் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் வீட்டின் அருகே வைக்கப்பட்ட பொறியில், கீரி போன்ற தோற்றமுடிய விலங்கு பிடிபட்டது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர் நடத்திய ஆய்வில் அது அரிய வகையைச் சேர்ந்த புனுகு பூனை என்பது தெரியவந்தது. அதனை பத்திரமாக மீட்ட அதிகாரிகள் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
இதையும் படிக்க: நீலகிரியில் தொடங்கிய உறைபனி சீசன் - ஊட்டியில் கடும் பனிப்பொழிவு