Published : 17,Dec 2021 06:49 PM

ஆடைகள் முதல் காலணிகள் வரை: லைப்ஸ்டைல் பொருட்களின் விலை ஏற வாய்ப்பு?

From-apparel-to-shoes-what-is-the-reason-for-rise-in-prices-of-lifestyle-products

காலணிகள், வாசனை திரவியங்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் என லைப் ஸ்டைல் பொருட்களின் விலையில் ஏற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் முடங்கிய உற்பத்தி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மாதிரியான காரணங்களால் இந்த பொருட்களின் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

image

எகானாமிக் டைம்ஸ் நாளிதழின் அறிக்கையின்படி, சரக்கு மற்றும் கொள்முதல் விலையில் காணப்பட்டுள்ள ஏற்றத்தின் காரணமாக மேற்கூறிய பொருட்களின் விலையில் ஏற்றம் பிரதிபலித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல சந்தையில் இந்த பொருட்களுக்கு அதிகரித்துள்ள தேவை காரணமாக இதன் விலையில் ஏற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடை மற்றும் அணிகலன்களின் விலையை பொறுத்தவரையில் தற்போது 10 - 15 சதவிகிதம் ஏற்றம் இருப்பதாகவும், அது மேலும் 10 சதவிகிதம் கூட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலணிகளுக்கு 8 - 10 சதவிகிதமும், காஸ்மட்டிக்ஸ் பொருட்களுக்கு 10 - 15 சதவிகிதம் விலை உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

எப்படி சிப் தடுப்பாட்டினால் கார், மொபைல்போன் மாதிரியான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தட்டுப்பாடு உள்ளதோ அதே போல லைப்ஸ்டைல் பொருட்களுக்கும் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விநியோக சங்கிலியில் நிலவும் சிக்கலை காட்டிலும் சரக்கு கொள்முதல் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார் லைப்ஸ்டைல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சி.இ. ஓ தேவராஜன் ஐயர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்