மருந்து வாங்கச் சென்ற மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி 10 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம், கணேஷ; நகரைச் சேர்ந்தவர் பிரேமாபாய் (72), இவர் மருந்து வாங்குவதற்காக மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள மருந்துக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடை மூடப்பட்டிருந்ததால் கடையின் முன்பு மூதாட்டி நின்றிருந்துள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த இரண்டு மர்ம நபர்கள், தனியாக நின்றிருந்த மூதாட்டியிடம் வந்து, தெருவில் ஒரே சண்டையாக உள்ளது. நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பேச்சுக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மூதாட்டி கையில் அணிந்திருந்த 5 சவரன் தங்க வளையல் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை வாங்கிய மர்ம நபர்கள் அதை பர்சில் வைப்பது போல் ஏமாற்றி நகையுடன் அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் மூதாட்டி பர்சை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தனது மகனிடம் நடந்ததை கூறி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!