Published : 19,Nov 2021 08:38 AM
''ஜெய் பீம் படத்துக்கு எந்த விருதும் வழங்கக் கூடாது'' - பாமக வழக்கறிஞர் பாலு கடிதம்

ஜெய் பீம் திரைப்படத்திற்கு எந்த விருதும் வழங்கக் கூடாது என பா.ம.க வழக்கறிஞர் பாலு மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது. இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர், தமிழ்நாடு மக்கள் தொடர்பு துறை செயலாளருக்கு பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு எழுதியுள்ள கடிதத்தில், ஜெய் பீம் திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதையும் வழங்கக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.