[X] Close

ஒரு கையில் சிக்ஸர் விளாசல்: ரிஷப் பன்ட் உடன் வில்லியம்சனை ஒப்பிடும் ரசிகர்கள்

விளையாட்டு

Williamson-or-Pant-New-Zealand-skipper-slams-incredible-one-handed-six-during-T20-World-Cup-final
ஒற்றை கையில் சிக்ஸர் விளாசும் ஷாட்டை ரிஷப் பன்டிடம் இருந்து வில்லியம்சன் கற்றுக்கொண்டிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
துபாயில் நேற்று நடந்த டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. முதல் இன்னிங்சின்போது, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் (3 சிக்ஸர்,10 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் நிதானமாக பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன், முதல் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் டாப் கியருக்கு பேட்டிங்கை மாற்றிய வில்லியம்ஸன், அடுத்த 31 பந்துகளில் 70 ரன்களை அதிரடியாக குவித்தார். 32 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டியபோது, கிளென் மேக்ஸ்வெல் வீசிய பந்தை ஒரு கையால் சிக்ஸருக்கு அடித்து அசத்தினார்.
 
image
வில்லியம்சனின் இந்த அற்புதமான ஷாட்டுக்குப் பிறகு, அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் நினைவுக்கு வந்தார். ஏனெனில், பண்ட்தான் இப்படி ஒற்றை கையில் அடிக்கடி சிக்ஸர் விளாசுவார். அந்த ஷாட்டை எப்படி செய்வது என்று ரிஷப் பன்டிடம் இருந்து வில்லியம்சன் கற்றுக்கொண்டிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close