Published : 05,Nov 2021 06:11 PM
பால்வீதி மண்டல நட்சத்திர தொகுப்பின் படத்துடன் 'தீபாவளி வாழ்த்து' தெரிவித்த நாசா

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பால்வீதி மண்டலத்தின் அருகே உள்ள ஆயிரக்கணக்கான வண்ணமயமான நட்சத்திரங்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டத்தின் அற்புதமான படத்தை ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட்டில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். குளோபுலர் கிளஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர விளக்குகளின் திருவிழா ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பதிவுசெய்யப்பட்டது. இது பால்வீதி மண்டலத்தின் அருகே உள்ள அடர்த்தியான ஆயிரக்கணக்கான வண்ணமயமான நட்சத்திரங்களின் தொகுப்பு " என்று தெரிவித்துள்ளது.
✨ Happy #Diwali to all who celebrate! This stellar festival of lights, called a globular cluster, was captured by @NASAHubble. It contains a densely-packed collection of colorful stars close to the heart of the Milky Way: https://t.co/0JGYRhvl4x pic.twitter.com/g4MLMxNkkK
— NASA (@NASA) November 4, 2021
நாசாவின் இந்த தீபாவளி வாழ்த்துக்கு ட்விட்டரில் பலரும் மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த புகைப்படத்தை உண்மையான விளக்குகளின் திருவிழா என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனைப்படிக்க...சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்