காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன மகனை மீட்டுத் தரக்கோரி ஏஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த தாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசுக்குட்டி. அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான கீர்த்தனாவை காதலித்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துள்ளார். ராசுக்குட்டி சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக திருமணமான ஒரே வாரத்தில் கீர்த்தனாவின் பெற்றோர் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டைவிட்டு சென்ற ராசுக்குட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் ராசுக்குட்டியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், புகார் கொடுத்து ஒருவாரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாததால் இன்று திருத்தணி ஏஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடனர்.
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி சாய் பிரனீத் தெரிவித்ததை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?