Published : 19,Aug 2017 02:19 AM

அதே நாற்காலி... பிளாஷ்பேக்கில் கோலி!

Kohli-relaxes-on-the-same-chair

இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்த பின், விராத் கோலி களமிறங்கிய முதல் ஒரு நாள் போட்டி இலங்கைக்கு எதிரானது. வருடம் 2008, ஆகஸ்ட் 18. இடம் தம்புல்லா. 

இப்போது கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் கோலி, இந்திய அணிக்கு கேப்டனாக சென்றிருக்கிறார் அங்கு. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று (18-ம் தேதி) அதாவது தான் முதன் முதலில், ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய அதே நாளில், அப்போது அமர்ந்த அதே நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். 

அதைப் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், ’சில விஷயங்களை ஒரு போதும் மாற்ற முடியாது. 2008-ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் இந்த நாற்காலியில்தான் அமர்ந்திருந்தார் கோலி’ என்று குறிப்பிட்டுள்ளது. 

இதுபற்றி விராத் கோலி டிவிட்டரில், ‘இதே நாளில், இதே மைதானத்தில், இதே நாற்காலியில்தான் இந்திய அணியுடனான எனது பயணம் தொடங்கியது’ என்று  பகிர்ந்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்