Published : 11,Oct 2021 12:33 PM

கடலூர்: கோயில் திருவிழாவில் ரகளை - இளைஞரை ஊர் மத்தியில் கட்டிப்போட்டு தாக்கிய மக்கள்

Cuddalore-Temple-Festival-problem-People-who-tied-up-and-attacked-the-youth

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி அருகேயுள்ள புத்தேரி கிராமத்தில் அரசின் தடையை மீறி நடத்தப்பட்ட கோவில் திருவிழாவில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை, ஊர் மத்தியில் மக்கள் கட்டிப்போட்டு தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது.

புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, புத்தேரி கிராமத்தினர் தங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் அரசின் தடையை மீறி திருவிழா நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் மணிகண்டன் என்ற இளைஞரை கயிறால் கட்டிப்போட்டு கிராம மக்கள் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து காவல் துறையினரிடம் கேட்டதற்கு, கோயில் திருவிழாவின்போது ரகளையில் ஈடுபட்டதாக மணிகண்டன் என்பவர் மீது மக்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும், அவரைக் கட்டிப்போட்டு தாக்கியது சம்பந்தமாக தற்போது மற்றொரு புகார் வந்துள்ளதாகவும், அதன்பேரில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைப்படிக்க...சமையல் எண்ணெய் கையிருப்புக்கு கட்டுப்பாடு - விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை