இந்த வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சோதனையாக அமைந்துள்ளது. முதலில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இப்போது இங்கிலாந்தும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. அதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தனது கண்டங்களை ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார்.
The @TheRealPCB have every reason to be disappointed with the ECB. Pak and WI toured England last year during pandemic before vaccines. England owes so much to both Pak and WI. Least ECB could do is not cancel the reciprocal tours. There are no winners when cricket is cancelled. — Wasim Jaffer (@WasimJaffer14) September 20, 2021
“கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியப்படாத சூழலில் தான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி இருந்தன. அதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அந்த இரு அணிகளுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்த தொடரை இங்கிலாந்து ரத்து செய்யாமல் இருந்திருக்காலம்” என சொல்லி இருந்தார் வாசிம் ஜாபர்.
“இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் ‘கேம் ஸ்பிரிட்’ என சொல்லிக் கொண்டு சகோதரர் வாசிம் ஜாபர் பாகிஸ்தான் ஆதரிப்பவர்” என நெட்டிசன் ஒருவர், ஜாபரை சாடினார்.
https://t.co/sTN8DxY3zo pic.twitter.com/esEkPTYUru — Wasim Jaffer (@WasimJaffer14) September 21, 2021
அதற்கு ரியாக்ஷன் செய்யும் வகையில் ஜாபர், 2007 கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பதிவு செய்தி இரட்டை சத்தின் ஸ்கோர் போர்டை பகிர்ந்திருந்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம் : ‘கேப்டன்சி பதவி’ கோலி தானாக முடிவு எடுக்கிறாரா.. சூழலின் அழுத்தம் காரணமா?- என்ன நடக்கிறது?
Loading More post
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
செய்ததோ உதவி.. விழுந்ததோ தர்மஅடி! பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரின் பரிதாப நிலை!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி