Published : 12,Aug 2017 12:01 PM

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி

india--srilanka-test--first-day-ends

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 329/6.

இந்தியா-இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மட்டும் கடைசி டெஸ்ட் போடியின் முதல் நாளில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தது. முதலில் களமிறங்கிய ராகுல்-தவான் ஜோடி  188 ரன்களை எடுத்து சாதனை படைத்தது. ராகுல் 135 பந்துகளில் 85 ரன்களையும், தவான் 123 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு வந்த கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 1 ரன்களுடனும், சாஹா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இலங்கை அணியின் மலிண்டா புஷ்பகுமாரா 3 விக்கெட்டையும், லக்‌ஷன் சண்டகன் 2 விக்கெட்டையும், விஷ்வா ஃபெர்நான்டோ 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்