[X] Close

கீழக்கரை : பெட்ரோல் பங்கில் ஆயுதங்களை காட்டி ரூ.1.70 லட்சம் கொள்ளை

வீடியோ ஸ்டோரி

ராமநாதபுரம் மாவட்டம் கீழாக்கறைக்கு அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி, அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி 1.70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 


Advertisement

முதற்கட்ட தகவலின் படி நள்ளிரவு நேரத்தில் சொகுசு இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து, ஊழியர்களை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு அவர்கள் வந்த வாகனத்தை கிராம பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். அந்த வாகனத்தில் பதிவு எண் ஏதும் இல்லை என்ற தகவலும் வந்துள்ளது. 

கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சி பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close