[X] Close

ரன் குவிப்பதில் என்னதான் சிக்கல்..? சச்சின் பாணியை ஃபாலோ செய்து மீண்டு வருவாரா விராட் கோலி

சிறப்புக் களம்

Come-back-to-the-form-Virat-Kohli-an-explainer-about-Indian-Skippers-50-innings-without-a-century-in-International-Cricket

மாடர்ன் டே கிரிக்கெட் களத்தில் மிகச் சிறந்த நான்கு வீரர்களில் (ஸ்மித், ரூட், வில்லியம்சன்) ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. அதிவேகமாக ரன்களை குவிப்பது இவரது பாணி. இருந்தும் ஏனோ கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ரன் வேட்டை தடைப்பட்டுள்ளது. 


Advertisement

image

சர்வதேச கிரிக்கெட்டில் 22,944 ரன்களை குவித்தவர் கோலி. ஆனால் 2020 முதலே அவரால் ரன் குவிக்க முடியவில்லை. குறிப்பாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று பார்மெட் கிரிக்கெட்டுகளிலும் சேர்த்து அவர் விளையாடிய 50 இன்னிங்ஸ்களில் சதம் விளாசாமல் உள்ளார் கோலி. இதில் அதிகபட்சமாக டி20 கிரிக்கெட்டில் 94 ரன்களை ஒரு இன்னிங்ஸில் எட்டியிருந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓரளவுக்கு விழிப்புடன் விளையாடும் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுவதுமாக தடுமாறுகிறார். 


Advertisement

கடைசியாக 2019-இல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதம் பதிவு செய்திருந்தார். அதன்பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 18 இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் மூன்று முறை மட்டுமே அரை சதம் கடந்துள்ளார். மூன்று முறை டக் அவுட்டாகியும் உள்ளார். அந்த 18 இன்னிங்ஸில் 11 முறை இரட்டை இலக்க ரன்களை கடந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் 78 ரன்களை கோலி எடுத்தது இந்த 18 இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள். 

image

ரன் குவிப்பதில் என்ன சிக்கல்?


Advertisement

கோலி இந்த 18 இன்னிங்ஸில் ஆறு இன்னிங்ஸ் மட்டுமே இந்தியாவில் விளையாடி உள்ளார். எஞ்சியுள்ள இன்னிங்ஸ் அனைத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் விளையாடியவை. அயலகத்தில் விளையாடிய அனைத்து இன்னிங்கசிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் வசமே தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். கிட்டத்தட்ட ஸ்விங் மற்றும் அவுட்ஸைட் தி ஆப் ஸ்டம்பில் வரும் பந்துகளை எதிர்கொண்டு ஆடும் பொழுது விக்கெட்டை இழக்கிறார் கோலி. இது நியூசிலாந்து, இங்கிலாந்து மாதிரியான தொடர்களில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அதில் கொஞ்சம் கவனம் வைத்தால் கடந்த 2018 இங்கிலாந்து தொடரை போல கோலி ரன் மழை பொழியலாம். அந்த சுற்றுப்பயணத்தில் கோலி இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதம் உட்பட 593 ரன்களை பதிவு செய்திருந்தார். ஆண்டர்சன்னிடம் விக்கெட்டை இழக்கவில்லை அவர். 

image

சச்சின் பாணியை கோலி பின்பற்ற வேண்டுமா?

கிரிக்கெட் களத்தில் ஃபார்ம் அவுட்டாவது இயல்பான ஒன்று. அதனை எல்லா ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் கடந்து வந்திருப்பார்கள். இப்போது கோலிக்கு அந்த காலம். அதனை கடக்க முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாணியை கோலி கைப்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டு வருகிறது. 

அதற்கு உதாரணமாக 2004-இல் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு கவர் டிரைவ் கூட ஆடாமல் 241 ரன்களை சச்சின் பதிவு செய்திருந்தார். அது போல கோலியும் ஆட வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஆஸ்திரேலியா. இப்போது கோலி விளையாடிக் கொண்டிருப்பது இங்கிலாந்து. இங்குள்ள சூழல் துவங்கி அனைத்தும் மாறுபடும். இருந்தாலும் சச்சின் பாணியை ஒரு முறை கோலி செய்து பார்க்கலாம். நிச்சயம் அதற்கு பலனும் கிடைக்கலாம். 

அதன் மூலம் அவரது சத்திற்காக வெயிட் செய்து வரும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கலாம். 

கோலி பூப்பந்தை போன்றவர். அந்த பந்தை நீரினுள் பொத்தித்தான் வைத்தாலும் அது தானாகவே தண்ணீருக்கு மேலே வந்துவிடும். நிச்சயம் கோலி அப்படி மீண்டு வருவார். அதன் மூலம் இந்திய அணியின் மிடில் ஆர்டரும் பலம் பெறும் என நம்புவோம். 


Advertisement

Advertisement
[X] Close