[X] Close

கனத்த இதயத்துடன் தாய் நாட்டிலிருந்து விடைபெறுகிறேன் - ஆப்கன் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு

உலகம்

Goodbye-Motherland-Afghan-Woman-Roya-Heydari-Filmmaker-Heartbreaking-Post
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் புகைப்படப் பத்திரிகையாளருமான பெண் ஒருவர் தாய்நாட்டிலிருந்து வெளியேறியது குறித்து பதிவிட்ட ட்வீட் மனதை உருக்குவதாக உள்ளது.
 
ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. இதனால் பெண்களுக்கு இருக்கும் முழு சுதந்திரமும் பறிக்கப்படும் என்று கருதி ஏராளமான பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். 'இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் எல்லைக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது' என்று தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். ஆனால் அங்கிருந்து வரும் தகவல்கள் முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளன. பணிக்குச் செல்ல விரும்பும் பெண்கள் பலர் மீட்பு விமானங்கள் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று குடியேற முயற்சித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் புகைப்படப் பத்திரிகையாளருமான ரோயா ஹெய்தாரி என்பவர் தாய்நாட்டிலிருந்து வெளியேறியது குறித்து பதிவிட்ட ட்வீட்டும் புகைப்படமும் மனதை உருக்குவதாக உள்ளது. அவரது பதிவில், ''நான் என் முழு வாழ்க்கையையும் விட்டுவிட்டு, தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக என் வீட்டை விட்டு வெளியேறினேன். மீண்டும், நான் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கப் போகிறேன். என் கேமராக்கள் மற்றும் உயிரற்ற ஆன்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறேன். கனத்த இதயத்துடன், தாய் நாட்டிலிருந்து விடைபெறுகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார் ரோயா ஹெய்தாரி.
 
https://t.co/MI3H8lQ5e4">pic.twitter.com/MI3H8lQ5e4— Roya Heydari (@heydari_roya) https://twitter.com/heydari_roya/status/1430883632168816642?ref_src=twsrc%5Etfw">August 26, 2021
 
தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அச்சத்தால் ரோயா ஹெய்தாரி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

Advertisement

Advertisement
[X] Close