Published : 25,Aug 2021 10:06 PM

அரசு சொத்துகளை தனியாருக்கு குத்தகை விடுவதா? - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம்

Congress-MP-Rahul-Gandhi-condemned-Leasing-government-property-to-the-private-sector

அரசு சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'நாடு விற்பனைக்கு' என்ற ஹேஷ்டேக் மூலம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி குறிப்பிட்டிருக்கும் ராகுல் காந்தி முதலில் மனசாட்சியை விற்றார்கள், தற்போது தேசத்தை விற்கப் பார்க்கிறார்கள் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி காங்கிரசாரும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். நெருங்கிய நண்பர்களின் நிறுவனங்களுக்காக இந்தியாவின் சொத்துகளை விற்கப் பார்க்கிறார்கள் என்றும் காங்கிரசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் 6 லட்சம் கோடி பணமாக்குதல் திட்டம் குறித்து ராகுல் புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவித்து வருகிறார் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். நாட்டின் சுரங்கங்கள், நிலங்கள் உள்ளிட்ட வளங்களை காங்கிரஸ் தான் விற்பனை செய்தது என்றும் அவர் பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்