[X] Close

புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூபாய் 2.43 குறைகிறது: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல்

இந்தியா

Petrol-price-has-come-down-by-2-Rupees-and-43-Paise-and-Governor-approves-Cabinet-decision-in-Puducherry

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான வாட் வரியை 3 சதவிகிதம் குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 43 காசு குறையவுள்ளது.


Advertisement

புதுச்சேரியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 99 ரூபாய் 52 காசாகவும் காரைக்காலில் 99 ரூபாய் 30 காசாகவும் இருக்கும் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து விலை குறைப்பு எப்போது அமலாகும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close