ஹைதராபாத்தில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட தொழிலதிபரை, கடன் வாங்கிய நபர் கூலிப்படையினருடன் அடித்துக்கொன்றார்.
ஆந்திராவின் கலாபாதர் பகுதியில் குப்பைகள் வாங்கும் தொழிலதிபரான 36 வயதான அப்துல் சாதிக் ஞாயிற்றுக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். காஜிபண்டா, கமாடிபுராவைச் சேர்ந்த அப்துல் சாதிக், மற்றொரு தொழிலதிபர் சாதிக் பின் அலிக்கு ரூ .8 லட்சம் கடனாக கொடுத்தார்.
கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்குமாறு அப்துல் சாதிக், சாதிக் பின் அலி க்கு அழுத்தம் கொடுத்துவந்தார். ஆனால் சாதிக் அலி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வந்ததாகவும், அந்தத் தொகையின் ஒரு பகுதியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை பற்றி கூறும் காலாபாதர் இன்ஸ்பெக்டர் எஸ்.சுதர்ஷனின் , “சாதிக் பின் அலி, சாதிக் என்பவரை ஞாயிற்றுக்கிழமை இரவு மிஸ்ரி குஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இருவரும் சந்தித்த பிறகு, அவர்கள் அலியின் கூட்டாளிகளுடன் அந்த பகுதியில் சுற்றித் திரிந்தனர். சுமார் இரவு 11 மணியளவில் அலி மற்றும் அவரது நண்பர்கள் சாதிக்கை அடித்து கொலை செய்தனர்” என தெரிவித்தார்
இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட சாதிக் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix