[X] Close

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி; வெளியாகுமா அரசியல் பிரவேச அறிவிப்பு?

Rajinikanth-meet-fans

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாத இறுதியிலிருந்து ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

காலா திரைப்படத்தில் ரஜினி நடிக்கும் பகுதியின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதைத் தொடர்ந்து ரசிகர்களை ரஜினி சந்திப்பார் எனத் தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, அரசியலில் ஈடுபட நேர்ந்தால் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவர்களை அருகில் சேர்க்க மாட்டேன் எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் "நாட்டில் சிஸ்டம் சரியில்லை" "போருக்கு தயாராக இருங்கள் என அவர் கூறியதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசியல் பிரவேசம் குறித்து நண்பர்கள், பத்திரிகையாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கும் போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பினை அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close